...
செய்திகள்

ஊடகவியலாளர் ரஞ்ஜன் அருண் பிரசாதிற்கு அச்சுறுத்தல் – ஆனந்தகுமார் கண்டனம்!

இரத்தினபுரி மாவட்டத்தில் பிறந்து, இன்று சர்வதேச ஊடக நிறுவனத்தில் கடமையாற்றும் ஊடகவியலாளர் ரஞ்ஜன் அருண் பிரசாதிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைபாடு குறித்து பொலிஸார் உரிய கவனம் செலுத்தாமை தொடர்பில் என ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளிலும் ரஞ்ஜன் அருண் பிரசாதிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் குறித்து, கடந்த மார்ச் மாதம் பொலிஸ் தலைமையகத்தில் ஆதாரங்களை சமர்ப்பித்து முறைபாடு செய்யப்பட்டது.

எனினும், அந்த சந்தர்ப்பத்தில் மாத்திரம் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்பின்னர், அவரது சகோதரர் மற்றும் அவரது சக ஊழியர் ஆகியோரிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட இரத்தினபுரி பொலிஸார், அதையடுத்து விசாரணைகளை முன்னெடுக்கவில்லை.

இவ்வாறான நிலையில், ரஞ்ஜன் அருண் பிரசாத், இரத்தினபுரி பொலிஸ் நிலையத்திற்கு இன்று 8 மாதங்களின் பின்னர் அழைக்கப்பட்டு மற்றுமொரு வாக்குமூலத்தை வழங்குமாறு பொலிஸாரினால் அவரிம் கோரப்பட்டுள்ளது.

தனக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவித்து செய்யப்பட்ட முறைபாடு குறித்த விசாரணை 8 மாதங்களின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டமைக்கு, ஊடகவியலாளர் ரஞ்ஜன் அருண் பிரசாத், பொலிஸாருக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

இலங்கை ஊடகவியலாளர்களுக்கு இந்த ஆட்சியின் கீழ் நியாயம் கிடைக்காது என்பதற்கு இதுவே சிறந்த சாட்சியாகும்.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு, இரத்தினபுரி பொலிஸார் 8 மாதங்களின் பின்னரே விசாரணைகளை ஆரம்பிக்கின்றது.

இந்த 8 மாத காலப் பகுதியில், அவருக்கு ஏதேனும் உயிர் ஆபத்து ஏற்பட்டிருக்குமானால், யார் அதற்கு பொறுப்பு கூறுவது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen