செய்திகள்நுவரெலியாமலையகம்

ஊரடங்கு சட்டத்தை மீறி ஹட்டன் திம்புலவில் இடம்பெற்ற ஆலய விழா.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட போதிலும் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி ஓர் ஆலயத்தில் விழா நடத்தப்பட்டதாக அட்டன் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பகுதியிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.

இந்த விழா நேற்று முன்தினம் (22) திம்புல போகஹவத்த கோவிலில் நடைபெற்றது.

குறித்த விழாவை நடத்தியமைக்காக அட்டன் நீதிவான் நீதிமன்றில் கோவில் நிர்வாகக் குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொட்டகலை சுகாதார மருத்துவ அதிகாரி சுதர்சன் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டதாகவும் அவர்கள் சரியாக முகக்கவசம் அணியவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen