அரசியல்செய்திகள்

ஊழல் மோசடி இனி இல்லை – கூறுகிறார் கோட்டா .

மக்கள் பெரும் துயரை எதிர்கொள்ளக் காரணமான ஊழல் மோசடிகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள அரசாங்கத்தைப் போன்று ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அரசாங்கம் வரலாற்றில் இல்லை என அவர் குற்றம் சாட்டினார்.

அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொடுக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் பெரும்பாலும் ஊழல் மோசடிகள் குறைவடையும் என கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

அனைத்து மட்டத்திலும் இடம்பெறும் ஊழல் மோசடிகளை நாம் முடிவுக்குக் கொண்டுவர தயாராகவுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

கேகாலையில் இன்று நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button