...
செய்திகள்

ஊவா – நுவரெலியா இடையிலான பொது போக்குவரத்த்தால் மக்கள் அச்சம் ..

டி.சந்ரு
நுவரெலியாவிலிருந்து ஊவா பிரதேசத்திற்கும்,ஊவா பிரதேசத்திலிருந்து நுவரெலியாவுக்கும் இடையிலான பொது போக்குவரத்தில் அரசாங்க பொது போக்குவரத்து சேவை பஸ்கள் தொடர்ந்தும் ஈடுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நுவரெலியா மக்கள் மத்தியில் கொரோனா அச்ச நிலை தோன்றியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் கொரோனா மற்றும் டெல்டா ஸைரஸ் தொற்று வீரியமடைந்துள்ள நிலையில் பாரிய அசாதாரண சூழ்நிலைக்கு மக்கள் சென்றுள்ளனர்.

அதேநேரத்தில் தொற்றிலிருந்து பொதுமக்களை காப்பாற்றும் வகையில் அரசாங்கம் பல்வேறு மட்டத்திலும் சட்டங்களை அமுல் படுத்தி அதை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இந்த நிலையில் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்தை தடைசெய்துள்ளதாக அறிவிக்கின்ற போதிலும் இவ்வாறு மாகாணம் விட்டு மாகாணத்திற்கு போக்குவரத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை சேவையில் ஈடுப்படுத்தியுள்ளமை அச்சத்தை தூண்டியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும்  நுவரெலியாவிலும்,ஊவா பிரதேசத்திலும் நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் இறப்பு வீதமும் அதிகரித்துள்ளமையையும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 
எனவே நுவரெலியாவுக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களில் இருந்து வருகை தரும் போக்குவரத்து பஸ்களை நிலைமை சரியாகும் வரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen