செய்திகள்

ஊவா மாகாண ஆளுனரின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி

நத்தார் பண்டிகை அன்பு மற்றும் அறம் பற்றிய பாடங்களை எமக்குப் போதிக்கும் ஒரு பலமான குரலைக்கொண்ட இயேசுவின் பிறப்பைக் குறித்து நிற்கிறது.

நத்தார் உணர்வையும் அது உட்பொதிந்துள்ள கொடை, பகிர்வு, மன்னிப்பு மற்றும் ஏனையவர்களைப் பராமரித்தல் ஆகிய மனிதாபிமான பெறுமானங்களை மனதிற் கொண்டு, இன்றைய சவால்மிக்க காலப்பகுதியில் உள ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்ட மக்களை நாடிச் சென்று அவர்களது வாழ்க்கையைச் சிறப்பானதாக மாற்றக் கைகொடுப்போம்.

இயேசுபிரானின் நல்வழிகாட்டல்களை மேலும் சமூகமயப்படுத்தி, ஒற்றுமையை உருவாக்குவதே கிறிஸ்தவ சகோதரர்கள் இயேசுபிரானுக்குக் கொடுக்கக்கூடிய விசேட கௌரவமாகும் என்று நான் நினைக்கின்றேன். இயேசுபிரான் வாழ்வு முழுவதும் மனித நலனைக் கருத்திற்கொண்டு கடைபிடித்து வந்த குணாம்சங்களை, ஏனைய காலங்களை விடவும் தற்போதைய சூழ்நிலையிலேயே சமூக நலனை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்துவது பொருத்தமானதாக அமையும்.

சமாதானம், அமைதி நல்லிணக்கத்தின் முகவர்களாக நாம் மாறவேண்டிய காலம் இது. ஒவ்வொருவரும் இத்தகைய சிந்தனையுடன் செயற்பட்டால் அடுத்த வருட நத்தார் பண்டிகையை குடும்ப உறவுகளுடன் அமைதியாகவும், சந்தோசமாகவும் கொண்டாட முடிவது உறுதி.

எவராவது செய்யட்டும், அது நமக்குரியதல்ல எனப் பொறுப்புக்களைத் தட்டிக்கழிக்காமல் நம்மிலிருந்து ஒவ்வொருவரும் அதற்காக உழைத்தால் முயற்சி திருவினையாகும்.

இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்களுக்கும் உலகெங்கும் பரந்துவாழும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் அமைதியும் சமாதானமும் நிறைந்த மகிழ்ச்சிகரமான நத்தார் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் என அவர் தெரிவித்தார்.

நடராஜா மலர்வேந்தன்
லுணுகல நிருபர்

Related Articles

Back to top button