விளையாட்டு

ஊவா மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளில் கரம்(Carrom) போட்டியில் பசறை தமிழ் தேசிய பாடசாலை அணியினர் வெற்றி பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு

நடராஜா மலர்வேந்தன்

ஊவா மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளில் கரம்(Carrom) போட்டியில் பசறை தமிழ் தேசிய பாடசாலை அணியினர் வெற்றி பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு.

கடந்த வாரம் நடைபெற்று முடிந்த ஊவா மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட விளையாட்டு போட்டிகளில் கரம் போட்டி தொடரில் பங்குபற்றிய பசறை தமிழ் தேசிய பாடசாலை அணியினர் சகல வயது மட்ட போட்டிகளிலும் வெற்றி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

20 வயதின் கீழ் ஆண்களுக்கான போட்டியில் முதலாம் இடம்,
17 வயதின் கீழ் ஆண்களுக்கான போட்டியில் முதலாம் இடம்,
20 வயதின் கீழ் பெண்களுக்கான போட்டியில் மூன்றாம் இடம்,
17 வயதின் கீழ் பெண்களுக்கான போட்டியில் மூன்றாம் இடம் ஆகிய சாதனை வெற்றிகளோடு ஒட்டுமொத்தமாக
மாகாண மட்ட கரம் போட்டியில் (CARROM OVERALL CHAMPIONS ) சாம்பியனாகவும் பசறை தமிழ் தேசிய பாடசாலை தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனியொரு நபராக கடந்த சில வாரங்களாக பாடசாலையின் விளையாட்டுத் துறையில் அர்ப்பணிப்புடன் உழைத்து கெளரவமான வெற்றிகளைத் தேடித்தந்த விளையாட்டு பிரிவு ஆசிரியர் நாசர் உள்ளிட்ட ஆசிரியர் குழாமினருக்கும் போட்டிகளில் திறமைகளை நிலைநாட்டிய மாணவர்களுக்கும் பாடசாலை அதிபர், ஏனைய ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றனர்.

 

Related Articles

Back to top button