மலையகம்
“எங்கள் தோட்டம்” நூல் கொழும்பில் வெளியீடு

கந்தபளை தாமரை ஏ. யோகாவின் “எங்கள் தோட்டம்” நூல் கொழும்பில் இன்று மாலை (20.07.2018) வெளியீடு செய்யப்படவுள்ளது. வித்தியா சமூக அபிவிருத்தி நிறுவன ஆதரவில் மாலை 5.30மணிக்கு விவேகானந்த சபை மண்டபத்திலே குறித்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. மலையகத்தை சார்ந்த அரசியல் பிரமுகவர்கள் உட்பட பல கொழும்பு வாழ் மலையக சமூகஅமைப்புகளை சார்ந்தவர்களும் இந்த விழாவில் பங்கு கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த மாதமும் கொழும்பு தமிழ் சங்கத்தில் இந்த நூலின் அறிமுக விழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.