அரசியல்சிறப்புசெய்திகள்

எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நாளை ..

எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் நாளை காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதிக்காக தீர்க்கப்படவிருந்த 21 மரியாதை வேட்டுக்கள் மற்றும் வீதியின் இருமருங்கிலும் இடம்பெறவிருந்த இராணுவ மரியாதை ஆகிய சம்பிரதாயங்கள், ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய இடம்பெறாது அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணியளவில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷ சிம்மாசன உரையை நிகழ்த்தவுள்ளார்.

இதன்போது அரசியலமைப்பின் பிரகாரம், அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை ஜனாதிபதி முன்வைக்கவுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையாற்றிய பின்னர், சபை அமர்வு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு பிற்பகல் 01 மணிக்கு மீண்டும் சபை கூடவுள்ளது.

இதன்போது புதிய எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளார்.

இதேவேளை, ரஞ்ஜித் சொய்சாவின் மறைவின் பின்னர் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக வருண லியனகே நாளை பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

Related Articles

Back to top button