எட்டியாந்தோட்டை – கனேபல்ல தோட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு திகா – உதயா நிவாரணப் பணி ஊடாக உதவி.

கொரோனா வைரஸ் அசாதாரண சூழ்நிலையால் தனிமைப்படுத்தப்பட்ட எட்டியாந்தோட்டை
கனேபல்ல தோட்டத்தில் சில குடும்பங்களுக்கு ‘திகா – உதயா’ நிவாரண திட்டத்தின் கீழ் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கனேபல்ல தோட்டத்தில் கடந்த சில நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 29 குடும்பங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவருமான மயில்வாகனம் உதயகுமார்ஆகியோரின் பணிப்புரையின் கீழ் இந்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் எஸ்.மந்திரிகுமார் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிவாரணம் வழங்கும் நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் S.பிலிப், முன்னாள் மத்திய மாகாணசபை அமைச்சர் M. ராம், ஹட்டன் நகரசபை உறுப்பினர் K. பாலசுப்பிரமணியம், பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் அவர்களின் பிரத்தியேகச் செயலாளர் K. ஸ்ரீதரன் ஆகியோருடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் எட்டியாந்தோட்டை பிரதிநிதி டேனியல் ஆகியோரும் பங்குகொண்டனர்.


