ஆன்மீகம்

எட்டியாந்தோட்டை புனித சாந்த மரியாள் தேவஸ்தானத்தில் விசேட பூசைகள்..

இன்று கிறிஸ்தவர்களின் முக்கிய நாளான பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கிறிஸ்துவர்கள் தேவஸ் தானங்களில் விசேடபூசைகள் மற்றும் திருப்பலி நடைபெற்றன.

எட்டியாந்தோட்டை புனித சாந்த மரியாள் தேவஸ்தானத்தில் இன்று காலை 08 மணி அளவில் திருச்சிலுவை பாதை நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது ஏராளமான கிறிஸ்துவ பக்த அடியார்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அவர்கள்எட்டியாந்தோட்டை நகரிலிருந்து திரு சிலுவையை சுமந்து தேவஸ்தான சென்றார்கள்.குறித்த பூசைகளுக்கு ராணுவ பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

யுகேஷ்

Related Articles

Back to top button