செய்திகள்

எட்டியாந்தோட்டை வாகன விபத்து இளைஞன் பலி …

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் எட்டியாந்தோட்டை கொமடுவ பிரதேசத்தில் ஹட்டன் நகரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்றும் கரவனெல்ல பிரதேசத்தில் இருந்து எட்டியாந்தோட்டை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கர வண்டி ஓட்டுனர் சம்பவ இடத்தில் மரணமடைந்தார்.

இவ்வாறு மரணமடைந்தவர் தெஹியோவிட்ட தங்கம்பலை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது .

குறித்த இளைஞனின் சடலம் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக தற்போது வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் வேன் ஓட்டுனர் எட்டியாந்தோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை எட்டியாந்தோட்டை பொலிசார் மேற்கொள்கின்றனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com