செய்திகள்

எட்டியாந்தோட்டை விபத்தில் தலவாக்கலையை சேர்ந்த வயோதிப பெண் பலி ..

எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எட்டியாந்தோட்டை நாகஸ்தென்ன காந்திசிலைக்கு அருகில் ஏற்பட்ட வாகன விபத்தில் 75 வயது வயோதிப மூதாட்டி சம்பவ இடத்திலயேஉயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று (26/03) இரவு இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு விபத்தில் உயிரிழந்த மூதாட்டி தலவாக்கலை மிடில்டன் தோட்டத்தைச் சேர்ந்த கருப்பன் லெட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

தனது பேரனின் திருமண வைபவத்திற்க்காக எட்டியாந்தோட்டை நாகஸ்தென்ன தோட்டத்திற்க்கு சென்று தலவாக்கலை திரும்பும் வழியில் லொறியால் மோதி குறித்த மூதாட்டி உயிரிழந்தார்.

சடலம் நாவலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம், தொடர்பில் வாகன ஓட்டுனர் எட்டியாந்தோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணை நடைபெற்று வருகின்றது.

யூகேஷ்

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com