செய்திகள்

எட்டியாந்தோட்டை- ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில்

வேலவனே உலகினையே ஆடவைக்கும் சிவனார் மைந்தா
காலவெள்ளம் அள்ளிவரும் வேதனைகள் அகன்று நாம்
ஏற்றமுடன் வாழ உன்னருளே வேண்டுமய்யா
எட்டியாந்தோட்டை நகர் கோயில் கொண்ட எங்கள் கதிர்வேலவனே…

களனி கங்கை அருகினிலே எழுந்தருளி அரசோச்சும்
அன்னை உமை இளமகனே உன் அருளால்
எட்டி நின்று பணிந்தேற்றும் எங்களை நீ கிட்டிவந்து அரவணைப்பாய், ஆதரிப்பாய்
எட்டியாந்தோட்டை நகர் கோயில் கொண்ட எங்கள் கதிர்வேலவனே…

மலை சூழ்ந்த பெருநகரில் அழகுமிகு சூழலிலே
அன்னையர் இருவருடன் இணைந்து அருட்காட்சி தரும்
அன்புருவே, அருளுருவே எமையாழும் பேரருளே
எட்டியாந்தோட்டை நகர் கோயில் கொண்ட எங்கள் கதிர்வேலவனே..

அச்சமில்லாப் பெருவாழ்வை அமைதியுடன் வாழ்வதற்கு
இச்சகத்தில் எமக்கு நீ உறுதுணையாய் இருந்திடய்யா
ஒற்றுமையுடன் நாம் வாழ நல்ல வழி செய்திடுவாய்
எட்டியாந்தோட்டை நகர் கோயில் கொண்ட எங்கள் கதிர்வேலவனே…

தமிழ் மொழியும், நம் மதமும் தரணியிலே தலைநிமிர
ஏற்ற வழி செய்தெமக்கு உற்றதுணையாயிரய்யா
அருள் மழையைப் பொழிந்து நம் ஆற்றலைப் பெருக்கிவிடு
எட்டியாந்தோட்டை நகர் கோயில் கொண்ட எங்கள் கதிர்வேலவனே.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button