உலகம்செய்திகள்

எட்டு ஐரோப்பிய நாடுகளில் இருந்து நாட்டிற்கு பயணிகளை அழைத்து வர தடை

எட்டு ஐரோப்பிய நாடுகளில் இருந்து நாட்டிற்கு பயணிகளை அழைத்து வரும் செயற்பாட்டை, இன்று  முதல் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்த சிவில் விமான சேவை அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய பிரான்ஸ், ஸ்பெய்ன், ஜேர்மன், சுவிட்ஸர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன் மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இன்றிரவு 11.59 இலிருந்து எதிர்வரும் 29 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரையிலான காலப்பகுதியில் குறித்த நாடுகளிலிருந்து பயணிகளை அழைத்து வருவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரான், இத்தாலி மற்றும் தென்கொரியா ஆகிய மூன்று நாடுகளில் இருந்து, இலங்கைக்கு பயணிகளை அழைத்து வரும் செயற்பாட்டை தற்காலிகமாக நிறுத்துமாறு அனைத்து விமான நிலையங்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button