செய்திகள்

“எதிர்காலத்தில் நிலைமை மீண்டும் ஆபத்தானதாக மாறலாம்”

நாட்டில் டெல்டா வைரஸ் எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பதை துல்லியமான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு மேலும் ஒருமாதமாகும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் பத்மா குணரட்ண தெரிவித்துள்ளார்.

உறுதியான தகவல்கள் எவையும் கிடைக்காத போதிலும் டெல்டா வைரஸ் சமூகத்தில் பரவுகின்றமைக்கான சாத்தியங்கள் இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

பயணத்தடைகளால் நாளாந்த இறப்புகள் குறைவடைந்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் பொறுப்புணர்வுடன் செயற்படாவிட்டால் எதிர்காலத்தில் நிலைமை மீண்டும் ஆபத்தானதாக மாறலாம் என குறிப்பிட்டுள்ள அவர், டெல்டா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவது அனைவரினதும் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button