செய்திகள்

எதிர்கால நுகர்வுக்கு அரிசி தாருங்கள் – பங்களாதேஷிடம் இலங்கை கோரிக்கை

எதிர்கால நுகர்வுக்காக 100,000 மெட்ரிக் தொன் அரிசியை வழங்குமாறு இலங்கை பங்களாதேஷிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகருக்கு இடையில் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கைத்தொழில்களுக்கு தேவையான மூலப்பொருட்களை பெற்றுத்தருமாறும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளதுடன் நட்பு நாடு என்ற ரீதியில் இயன்றளவு உதவிகள் வழங்கப்படும் எனவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

Related Articles

Back to top button