அரசியல்செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித்-ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் தீர்மானம்..

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு இன்று தீர்மானித்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு, கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று கூடியது.

ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சஜித் பிரேமதாசவும் கலந்துகொண்டிருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்கும் பிரேரணையை ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்தார்.

இந்தப் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக்குழுவின் தீர்மானத்தை, கட்சியின் பொதுச்
செயலாளர் அகில விராஜ் காரியவசம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாக, சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download