செய்திகள்

எதிர்ப்பு சக்தியை இழந்தவர்களிற்கு மூன்றாவது டோஸை வழங்கவேண்டும் – வைத்தியர் ரஜீவ் டி சில்வா

சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி காணப்படாவிட்டால் அவர்களிற்கு மூன்றாவது டோஸ் அவசியம் என இலங்கை மருத்துவ சங்கத்தின் கொவிட் குழு உறுப்பினரான வைத்தியர் ரஜீவ்டி சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறானவர்களிற்கு பைசர் மொடேர்னா அல்லது அஸ்டிராஜெனேகாவை வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது டோஸினை வழங்கி ஒரு மாதத்திற்கு பின்னர் மொடேர்னா அல்லது அஸ்டிரா ஜெனேகாவை வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆபத்து காணப்பட்டால் இந்த வகையில் அடங்குபவர்களிற்கு மூன்றாவது டோஸினை வழங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button