அரசியல்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரர்: மஹிந்த

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரர் வேட்பாளராகக் களமிறக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ,‘தி ஹிந்து’ நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இதனைக் கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மக்களுக்கு யார் தேவை என்பதை கட்சியும் கூட்டமைப்பும் தீர்மானிக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதெல்லை 30 இல் இருந்து 35 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமையால், தனது மகனான நாமல் ராஜபக்ஸவால் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு தான் தலைமை தாங்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.