செய்திகள்

எதிர்வரும் 21 ஆம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாட தீர்மானம்

இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பெருநாளை ​ஜூலை மாதம் 21 ஆம் திகதி அனுஷ்டிப்பார்கள் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

ஹிஜ்ரி 1442 ஆம் ஆண்டுக்கான துல் ஹஜ் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. புனித துல் ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை இன்று தென்படாமை காரணமாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது.

Related Articles

Back to top button