செய்திகள்

‘எதிர்வரும் 3 வாரங்கள் மிகுந்த அவதானம் மிக்கதாகும்’

எதிர்வரும் 3 வாரங்கள் மிகுந்த அவதானம் மிக்கதாகுமென இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு காலப்பகுதியில் சிலர் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காமையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழலில் மக்கள் பொறுப்புடன் செயற்பட்டு சமூக இடைவெளியை பேணுவதோடு, முகக்கவசங்களை உரிய முறையில் அணிவது மிக அவசியமானதாகும். அத்துடன் வார இறுதி தினங்களில் மக்கள் ஒன்றுக்கூடுவதை தவிர்ப்பதும் சிறந்ததென இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் நாளாந்தம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிசிஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க நிபுணர்கள் செயற்குழு நேற்றைய தினம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் , சட்டத்தை மீறுவோருக்கு எதிராக தண்டனை வழங்குதல் மற்றும் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு விசேட தனிமைப்படுத்தல் சட்டத்தை தயாரிக்கவும் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com