அரசியல்
எதிர்வரும் 5 ஆம் திகதி கொழும்பில் நடக்க போவது என்ன?
புதிய அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் மாபெரும் ஆர்பாட்டத்தினை ஐக்கிய தேசிய கட்சி நடத்தியிருந்த நிலையில், புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்படவுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தினை தொடர்ந்து நடைபெறவுள்ள தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் போது இது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆதரவாளர்கள் அழைத்துவரப்படவுள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.