அரசியல்

எதிர்வரும் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்ட இணக்கம்

நாடாளுமன்றத்தை எதிர்வரும் 7ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இதன்போது, அதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் .

நவம்பர் 16 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தி இருந்த போதும் தன்னுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து நாடாளுமன்றத்தை எதிர்வரும் வாரம் கூட்டுவதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் பின்னர் நாடாளுமன்றத்தை 7 ஆம் திகதி கூட்டுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button