உலகம்

எத்தியோப்பியா ஆற்றில் மிதந்த 50 உடலங்கள் கண்டுபிடிப்பு.

எத்தியோப்பியாவின் டைக்ரே மற்றும் சூடான் நாடுகளுக்கு இடையே ஆற்றில் மிதந்த சுமார் 50 பேரின் உடல்களை கண்டுபிடித்ததாக சூடான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவர்களின் உடல்கள், அண்டை நாடான எத்தியோப்பியாவின் டைக்ரே பகுதியில் போரில் இருந்து தப்பி ஓடியவர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

சில உடல்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் அல்லது கைகள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டன, 

மேலும் மரணத்திற்கான காரணங்களைத் தீர்மானிக்க தடயவியல் விசாரணை தேவை என்று அந்த அதிகாரி திங்களன்று கூறினார். 

திங்களன்று இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, ஒருவர் கைகள் பிணைக்கப்பட்டிருந்தார், மற்றவர் மார்பில் காயத்துடன் இருந்தார். சக  10 உடல்களை புதைத்துள்ளனர்.

இவ்வாறு குறித்த ஆற்றுப்பகுதியில் சுமார் 50 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button
image download