செய்திகள்

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் புதிய பிறழ்வு நாட்டுக்குள் நுழையக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் – ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை!

தென்னாபிரிக்காவில் தற்போது இனங்காணப்பட்டுள்ள புதிய பிறழ்வு இலங்கையில் பரவியுள்ளதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

எனினும் உலகளாவிய ரீதியில் மக்கள் அங்கும் இங்கும் தொடர்ந்தும் பயணித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் புதிய பிறழ்வு நாட்டுக்குள் நுழையக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தென்ஆபிரிக்காவில் தற்போது இனங்காணப்பட்டுள்ள புதிய பிறழ்வு இலங்கையில் பரவியுள்ளதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

எனினும் உலகலாவிய ரீதியில் மக்கள் அங்கும் இங்கும் தொடர்ந்தும் பயணித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் புதிய பிறழ்வு நாட்டுக்குள் நுழையக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
எனவே அதற்கும் தயாராகிக் கொண்டே தேவையான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

டெல்டா தொற்று இனங்காணப்பட்ட முன்னர் நாம் தயாராகியதைப் போலவே , இதனை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளும் தயார் நிலையிலுள்ளன.

எந்த வைரஸ் பிறழ்வு இனங்காணப்பட்டாலும் சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவது அத்தியாவசியமானதாகும் என்றார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen