அரசியல்

எந்த சவாலுக்கும் முகம் கொடுக்க நான் தயார் – ரிஷாட்

தனக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தான் தயாராகவுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவில் தான் எந்த குற்றமும் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தான் குற்றம் செய்திருப்பின் பொலிஸ் மா அதிபரிடம் முறையிடுமாறும் காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக வழங்கப்பட்டிருந்த கால எல்லைக்குள் எந்த குற்றச்சாட்டும் இல்லை என்று உறுதியான பின்னரும், தன்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுமாயின் அது அரசியல் பழிவாங்கல் எனவும் எந்த சவாலுக்கும் முகம் கொடுக்க நான் தயார் எனவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button