அரசியல்செய்திகள்

எனது சகோதரனை உங்கள் சகோதரனாக ஏற்றுக் கொள்ளுங்கள் – பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாவை நியமித்தார் மஹிந்த .

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார். 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாடு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற நிலையில் அவர் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவம் மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

மாநாட்டின் ஆரம்பத்தில் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸின் ஆலோசனையின் பேரில் மஹிந்த ராஜபக்சவிடம் தலைமைப்பொறுப்பு கையளிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவத்ததை ஏற்றுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தமது உரையின் நிறைவில் ஜனாதிபதி வேட்பாளரை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
கடந்த நான்கரை வருடங்களாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் பயணித்த ஒன்றிணைந்த எதிர்கட்சியின் 13 அரசியல் கட்சிகளும், அண்மையில் பதிவு செய்யப்பட்ட 11 கட்சிகளும், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் தேசிய மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.

Related Articles

Back to top button