அரசியல்செய்திகள்

என் கையில் இரத்தகரை இல்லை – சஜித்

தன்னுடைய கைகளில் இரத்தக் கறைகள் இல்லை எனவும் தான் திருட்டு, கொள்ளை போன்ற செயல்களில்  ஈடுபடவில்லை எனவும் , கொலைகாரர்கள் மற்றும் போதைப் பொருள் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை எனவும் ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதிதலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்றைய தினம் குருணாகலில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி எவருக்கும் எதிரான பேரணி அல்ல எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர் , 

தான் தற்போது காலை 4 மணிக்கு எழுந்ததிலிருந்து இரவு 12 மணி வரையில் அபிவிருத்தி வேளைகளில் ஈடுபடுகின்றேன்.
எனது தூக்கத்தை குறைத்து கொண்டு தொடர்ந்தும் மக்களுக்கு சேவை செய்வேன் என உறுதி வழங்குகின்றேன் . 

இந்தப் பேரணி யாருக்கும் எதிரானது இல்லை. இது ஐக்கிய தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள் மற்றும் மக்களின் வெற்றிக்கான பேரணியாகும்.

எனவே எனது எதிர்பார்ப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அனைவரது ஆசிர்வாதத்துடன் நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு ஆகும் என அவர் கூறினார்.

Related Articles

Back to top button