செய்திகள்

என் சாவுக்குக் காரணம்” என சிறுமி எழுதியதாக சந்தேகிக்கப்படும் வாக்கியம் குறித்து விசாரணை..

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமியின் பாடசாலை அப்பியாசக் கொப்பிகள் சிலவற்றை புலனாய்வு திணைக்களத்தினர் தேடி எடுத்துள்ளதாகவும், சுவரில் எழுதப்பட்ட வாக்கியத்தைக் குறித்த சிறுமியினால் எழுதப்பட்டதா என்பதைப் பரிசோதனை செய்து பார்ப்பதற்காக அந்தச் சிறுமியின் அப்பியாசக் கொப்பிகள் அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய போது தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த சிறுமி தங்கியிருந்த அறையின் சுவரில் “என் சாவுக்குக் காரணம்” என சிறுமி எழுதியதாக சந்தேகிக்கப்படும் வாக்கியம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஆங்கில எழுத்துகளில் தமிழ் அர்த்தம் தரும் வகையில் எழுதப்பட்ட குறித்த வாக்கியம் தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
“என் சாவுக்குக் காரணம்” என சுவரில் எழுதப்பட்ட வாக்கியத்தைப் புகைப்படம் எடுத்து அதனை அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சுவரில் எழுதப்பட்ட வாக்கியம் தொடர்பில் கையெழுத்தை அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தால் நேற்றைய தினம் பரிசோதனை செய்யப்பட்டதாக அறியமுடிகிறது.

Related Articles

Back to top button