செய்திகள்

எம்.பிமார்களுக்கான சொகுசு வாகன இறக்குமதிக்கான பெறுகை இடைநிறுத்தம்.!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சொகுசு வாகன இறக்குமதிக்கான பெறுகை இடைநிறுத்தப்பட்டதன் மூலம் 200 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட நிதியை சேமிக்க முடிந்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

தற்போது இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த வாகன இறக்குமதிக்கான பெறுகை முழுமையாக இரத்துச் செய்யப்பட்டிருப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் வாகன இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button