செய்திகள்

எரிபொருள் கசிவினால் எரிந்துபோன முச்சக்கரவண்டி!

பம்பலப்பிட்டி சந்தியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றில் தீ பரவி முற்றாக நாசமாகியுள்ளது.

முச்சக்கரவண்டியின் இயந்திரப் பகுதியில் பரவிய தீ முழுமையாக பரவியதால் முற்றாக எரிந்து நாசமாகியது.

பொலிஸாரும் குறித்த பகுதியில் காணப்பட்ட மக்களும் தீயை கட்டுப்படுத்த முயற்சித்த போதிலும் அது சாத்தியமாகவில்லை.

முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தீ பரவும்போது முச்சக்கர வண்டியின் சாரதி மாத்திரமே இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button