செய்திகள்

எரிபொருள் விலைகளில் மாற்றம்.

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் ஒடோ டீசலின் விலையில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லையென நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 2 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோலின் புதிய விலை 128 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 4 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன்படி அதன் புதிய விலை 163 ரூபாவாகும்.

சூப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை மூன்று ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய ஒரு லீட்டர் சூப்பர் டீசலின் புதிய விலை 134 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலைத்திருத்தங்கள் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் என நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button