செய்திகள்

எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து துவிச்சக்கரவண்டி பேரணி

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று காலை துவிச்சக்கரவண்டி பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திலிருந்து துவிச்சக்கரவண்டி பேரணியாக மானிப்பாய் பிரதேச சபை வரை சென்றனர்.

குறித்த பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, வலி.தென்மேற்கு பிரதேச சபை தலைவர் அ.ஜெபநேசன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related Articles

Back to top button