சமூகம்
எரிபொருள் விலையை குறைப்பதற்கு அரசாங்கத்தை வலியுறுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

எரிபொருள் விலையை குறைப்பதற்கு அரசாங்கத்தை வலியுறுத்தி றத்கம பிரதேசத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று இன்று காலை நடைபெற்றுள்ளதுடன், சுமார் 45 நிமிடங்கள் வரை நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது, தென் மாகாண சபை உறுப்பினர்கள், றத்கம பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஹிக்கடுவை நகர சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.