செய்திகள்

எரிவாயு பயன்பாடு அதிகரிப்பே வெடிப்புகள் அதிகரிக்கக் காரணம்- அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து பரிமாறல்கள்

சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பிலேயே நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து பரிமாறல்கள் இடம்பெற்றுள்ளன.

பொருட்களின் விலை அதிகரிப்பை தடுக்க முடியாது எனவும் பண்டங்களுக்கான தட்டுப்பாடு மற்றும் அவற்றை பெற்றுக் கொள்வதற்காக பொதுமக்கள் வரிசையில் காத்திருத்தல் போன்ற சந்தர்ப்பங்கள் ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டின் பல பகுதிகளில் இருந்து பதிவாகும் சமையல் எரிவாயு கொள்கலன்களுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுக்களின் செறிமானத்திற்கு இணையாகவே உலகின் பல நாடுகளில் சமையல் எரிவாயு கொள்கலன்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அந்த நாடுகளில் இது போன்ற சம்பவங்கள் பதிவாவதில்லை எனவும் அமைச்சர் ஒருவர் அமைச்சரவை கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் செறிமானத்தில் சிக்கல்கள் இல்லை என்பது நன்கு புலப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, எரிவாயு பாவனை அதிகரிப்புடன் எரிவாயு தொடர்பான விபத்துக்கள் அதிகரித்து வருவதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

Related Articles

Back to top button