செய்திகள்

எலிக்காய்ச்சல் நோய் அதிகரிப்பு.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் எலிக்காய்ச்சல் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாயிகள் இந்த நோய் நிலைமை தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தொற்றுநோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்களை தாண்டி காய்ச்சல் காணப்பட்டால் வைத்தியரை நாடி சிகிச்சைப் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நான்காயிரத்து 512 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Related Articles

Back to top button
image download