...
செய்திகள்

எலிஸபெத் மகாராணியின் செய்தியை தாங்கிய கோல் இலங்கையை வந்தடைந்தது

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவை முன்னிட்டு 2 ஆம் எலிஸபெத் மகாராணியின் செய்தியை தாங்கி இலங்கை வந்தடைந்த கோல் அலரிமாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. கடந்த 3 ஆம் திகதி மாலைத்தீவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கோல், மூன்று நாட்களாக இலங்கையின் பல்வேறு இடங்களில் காட்சிப்படுத்தப்பட்ட பின்னர் நேற்று அலரிமாளிகைக்கு கொண்டுவரப்பட்டது.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில், கோலினை பிரதமரின் கையளித்தல் மற்றும் காட்சிப்படுத்துவது தொடர்பான ஒருங்கிணைப்பு இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளர் அனுராதா விஜேகோன், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் டபிள்யூ.எம்.டி.டி. விக்கிரமசிங்க, விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய, தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம், தேசிய விளையாட்டு சபையின் குழு உறுப்பினர் யஸ்வந்த் முத்தெட்டுவேகம, தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா, தேசிய ஒலிம்பிக் குழுவின் சந்தன லியனகே ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர். 

Related Articles

Back to top button


Thubinail image
Screen