செய்திகள்

எல்பிட்டிய தேர்தல் – உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் நடத்துவதை நிறுத்திவைக்குமாறு கோரி, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த மூவரினாலேயே இந்த மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் மற்றும் எல்பிட்டிய பிரதேச சபைக்கு பொறுப்பான தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழு கூடாமல் தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டதுடன், 2017ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுவதாகவும் மனுதாரர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download