செய்திகள்

எல்பிட்டிய பிரதேச சபையின் தேர்தல் திகதி உறுதியானது

 எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை ஒக்டோபர் 11 ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
காலி மாவட்ட தெரிவு அத்தாட்சி அதிகாரி சோமரத்ன விதானபத்திரணவினால் இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக, உடனடியாக தேர்தலை நடத்துமாறு உயர்நீதிமன்றம் கடந்த 30 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டது.

கடந்த மாகாண சபை தேர்தலின் போது ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியினால் அல்பிட்டிய பிரதேச சபையில் முன்வைக்கப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக குறித்த கட்சியின் செயலாளர் தாக்கல் செய்த மனு தொடர்பிலான தீர்ப்பை அறிவித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியினால் கடந்த மாகாண சபை தேர்தலில் பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ளுமாறும் உயர் நீதிமன்றம் இதன்போது தெரிவத்தாட்சி அதிகாரிக்கு உத்தரவிட்டது.

Related Articles

Back to top button