செய்திகள்பதுளை

எல்ல- முச்சக்கர வண்டி விபத்து ஒருவர் பலி..

எல்ல பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதியில் முச்சக்கர வண்டியொன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

வெல்லவாயவிலிருந்து எல்ல பகுதிக்கு சென்றுக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

வெல்லவாய பிரதான வீதியின் கரந்தகொல்ல பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவும் விபத்து நேர்ந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

ஏனைய மூவரும் ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button
image download