அரசியல்செய்திகள்

எவருடனும் சமஸ்டி ஆட்சி தொடர்பில் கலந்துரையாடவில்லை

ஒருமித்த இலங்கையை ஏற்றுக்கொண்டு அனைத்து பிரிவினரும் தன்னுடன் இணைவதாகவும் மாறாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எவருடனும் சமஸ்டி  ஆட்சி தொடர்பில் கலந்துரையாடவில்லை எனவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  இடம்பெற்ற தேசிய இராணுவ  சாசனத்தில் கையொப்பமிட்டு சமூகமயப்படுத்தும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ்,  சிவில் பாதுகாப்பு திணைக்களம், அங்கவீனமுற்ற இராணுவத்தினர் மற்றும் அந்த துறைக்குரிய பெண்கள் அமைப்பினர் உள்ளிட்டவர்களை பிரதிநிதிதுவப்படுத்தி தேசிய இராணுவ சாசனத்தில் சஜித் பிரேமதாச கையெழுத்திட்டார்.

ஒருமித்த இலங்கை, சுயநிர்ணயம், பிராந்திய ஒருமைப்பாடு, மனித உரிமைகளை வலுப்படுத்தல் ஆகியனவே எனதும், நாட்டினதும் எதிர்கால  பயணத்தின் நோக்கமாகும்.

இந்த விடயங்கள் தொடர்பில் எவருடனும் கலந்துரையாடவில்லை, இனிமேலும் கலந்துரையாட போவதில்லை.

தன்னுடன் இணைந்துள்ளவர்கள் கோரும் சகலதையும் ஒருமித்த நாட்டுக்குள் நடைமுறைப்படுத்துவதாக எனது விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளேன். ஆகவே அதனை அவ்வாறு செய்வதற்கு நான் கடமைபட்டுள்ளேன்.

ஒருமித்த இலங்கையை ஏற்றுக்கொண்ட அனைவரும் இன்று என்னுடன் இணைந்துள்ளனர்.

ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்களுடன் சமஸ்டி முறைமை தொடர்பில் நான் பேசியதில்லை என இதன்போது சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

Related Articles

Back to top button