விளையாட்டு

எவரெஸ்ட் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாட தயாராகும் உப்புல் தரங்க

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை நேபாளத்தில் நடைபெறவுள்ள எவரெஸ்ட் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான உப்புல் தரங்க விளையாடவுள்ளார். 

6 அணிகள் பங்கேற்கும் இத் தொடரில் பைரவா கிளேடியேட்டர்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி உப்புல் தரங்க இப்போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து  விடைபெற்றுள்ள உப்புல் தரங்க, ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றிருந்த ‘தி லெஜெண்ட்ஸ்’  கிரிக்கெட் தொடரில் சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்தார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்காக 26 சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 407 ஓட்டங்களை குவித்துள்ள தரங்க, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கழக மட்ட இருபதுக்கு 20 போட்டிகள் 126 இல் விளையாடி இரண்டு சதங்கள் , 19 அரைச்சதங்கள் அடங்கலாக  3384 ஓட்டங்களை குவித்துள்ளார்.

தினேஷ் சந்திமால், சீக்குகே பிரசன்ன ஆகியோருக்கு அடுத்து எவரெஸ்ட் பிரீமியர் லீக்கில் கிரிக்கெட் தொடரில் விளையாடும் மூன்றாவது வீரரானார் உப்புல் தரங்க. எனினும், இலங்கை கிரிக்கெட் குழாமில் மீண்டும் இணைக்கப்பட்டுள்ள தினேஷ் சந்திமால் எவரெஸ்ட் பிரீமியர் லீக்கில் பங்கேற்பது சந்தேகமாகும்.

Related Articles

Back to top button
image download