செய்திகள்

ஏப்ரல் 21 தாக்குதலுக்கும் ஐ.எஸ்.க்கும் தொடர்பு இல்லை ?

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கான நாடாளுமன்ற விசேட விசாரணை தெரிவுக்குழுவின் விசாரணைகள் மீண்டும் பிற்பகலில் ஆரம்பிக்கப்பட்டன. 

இன்று தெரிவுக்குழு முன்னிலையில் பல உயர் அதிகாரிகள் இன்று சாட்சியம் வழங்கினர்.

அதன்படி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன முதலில் வாக்குமூலம் வழங்கினார்.

இதன் போது கருத்து தெரிவித்த குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, ஏப்ரல் 21 தாக்குதலுக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர், தாக்குதலுடன் தொடர்புடைய நபர் ஒருவர் இந்தோனேசியாவில் உள்ள மூன்றாம் தரப்பினருக்கு, ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தலைவருக்கு தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில் இன்று சாட்சி வழங்கிய சிலரது விசாரணைகளை ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button