செய்திகள்

ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹெட்டிபொல, பண்டுவஸ்நுவர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். 

தாக்குதல் சம்பவம் இடம்பெற்று மூன்று மாத காலத்திற்குள் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் உயிருடன் இருந்தால் அவர்கள் அனைவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button