செய்திகள்

ஏப்ரல் 21 தாக்குதல் – சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்.

ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதான 13 பேரையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த வழக்கு, கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேகநபர்கள் 13 பேரையும் நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியப்போதே அவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பல மாதங்களிற்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

மேலும் பொலிஸாரின் ஆட்சேபனையுடன் அனைத்து சந்தேகநபர்களதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டு, இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் அனைவரும் காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

Related Articles

Back to top button