அரசியல்செய்திகள்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்-அசாத் சாலி.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்,மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இன்று வாக்குமூலம் வழங்கவுள்ளார்.

ஆணைக்குழுவிலுள்ள பொலிஸ் பிரிவில் அவர் இன்று வாக்குமூலம் வழங்கவுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

இதுவரையில் 47 பேர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளனர்.

இதேவேளை, 317 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

Related Articles

Back to top button