செய்திகள்

ஏப்.28ஆம் திகதி ஆடைத் தொழிலாளர்கள் போராட்டம்!

நாட்டின் அனைத்து முதலீட்டு வலயங்களி லுமுள்ள 140,000க்கும் மேற்பட்ட ஆடைத் தொழிலாளர்கள் ஏப்ரல் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக வர்த்தக வலய ஊழியர்களுக்கான தேசிய ஊடக மையம் தெரிவித்துள்ளது.
மே 8 ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு ஆதரவாக 1,48,000 தொழிலாளர்கள் கடமைக்கு சமுகமளிக்க மாட்டார்கள் என அந்த அமைப்பின் அழைப்பாளர் காமினி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
“இந்த ராஜபக்ஷ பரம்பரையை விரட்டியடிக்க நாட்டு மக்கள் வீதியில் இறங்குகிறார்கள். இந்த நேரத்தில் உழைக்கும் மக்களாகிய நாம் அத்தகைய தலைவர்களின் கீழ் வாழ விரும்பவில்லை. இன்று எமது ஊழியர்களுக்கு உண்பதும் குடிப்பதும் போதுமானதாக இல்லை மற்றும் வாழ்க்கைச் செலவுக்கு போதுமான சம்பளம் இல்லை. ஏப்ரல் 28ஆம் திகதி நடைபெறும் உழைக்கும் மக்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். எமது நாட்டில் ஏழு மில்லியன் உழைக்கும் மக்கள் உள்ளனர். எங்களுடன் இருக்கும் அரசாங்கத்துக்கு இது எளிதாக இருக்காது. இந்த ராஜபக்ஷாக்களை வீட்டுக்கு அனுப்புவதே எங்களின் ஒரே இலக்கு.” என்றார்.

Related Articles

Back to top button