Breaking Newsசெய்திகள்

ஏழாம் திகதிவரை பாடசாலைகளுக்கு பூட்டு.

(மாதுருபாகன் ராகவ்)

நாட்டிலுள்ள பாடசாலைகளை எதிர்வரும் ஏழாம் திகதி வரை தொடர்ந்தும் மூடுவதற்கு
தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா நிலமையினை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம்
எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்பிரகாரம் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் திகதி தொடர்பில் எதிர்வரும
ஏழாம் திகதி நடைபெறும் கலந்துரையாடலின் பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி
அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனாத் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நேற்றைய தினம் 30 ஆம் திகதிவரை
பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு
வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com