அரசியல்செய்திகள்

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு..

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இந்த சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் இந்த சந்திப்பு இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
image download