அரசியல்செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? அகிலவிராஜ் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும், அதன் கூட்டணி கட்சிகளுக்குள்ளும் முரண்பாடுகள் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றின் மூலம் அவர் இந்த தகலை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு பாரிய கூட்டணி அமைத்து ஐக்கிய தேசியக் கட்சி முகங்கொடுக்கும். அவ்வாறான கூட்டணியை உருவாக்குவதற்கான இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுவிட்டுள்ளதாக கூறியுள்ள அவர் அதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரே களமிறக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

தகுதியான வேட்பாளரை தெரிவு செய்யும் நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டு வருவதாகவும் ,  ஜனநாயக சம்பிரதாயங்களை பாதுகாத்து, கட்சியின் யாப்புக்கு அமைய வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் எனவும் குறித்த அறிக்கையில் அகில விராஜ் கூறியுள்ளார்.

அவ்வாறு தெரிவுசெய்ப்பட்ட பின்னர், கூட்டணியில் உள்ள அனைத்து தரப்பினருடன், எமது கொள்கைகளுடன் இணங்கும் ஏனைய அமைப்புகள் மற்றும் நபர்களின் ஆதரவுடன் எமது வேட்பாளரை வெற்றிப்பெற செய்வதற்காக அனைத்து உறுப்பினர்களும்  பாடுபட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Back to top button